பெரியாா் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


பிறந்த நாளையொட்டி பெரியாா் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பெரம்பலூர்

பிறந்தநாள் விழா

தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாள் விழா நேற்று சமூக நீதி நாளாக பெரம்பலூர் மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியாரின் சிலைக்கு தி.மு.க. சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது கட்சியின் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதேபோல் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில், கட்சியின் மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாச்சலம் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது கட்சியின் மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சந்திரகாசி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் எம்.என்.ராஜாராம், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கர்ணன், துறைமங்கலம் சந்திரமோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திராவிடர் கழகம்

பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியாா் சிலைக்கு திராவிடர் கழகம், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய தொழிலாளர் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, மக்கள் அதிகாரம், பாவேந்தன் பாரதிதாசன் இலக்கிய பேரவை, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்று கொண்டனர்.


Next Story