'பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் காவல்துறை இருக்க வேண்டும்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்


பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் காவல்துறை இருக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
x

பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் காவல்துறை இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சென்னை,

சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்கள், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டை துவக்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

"பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் காவல்துறை இருக்க வேண்டும். இந்த அரசு நலிந்தோர், எளியோர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை நாடக்கூடிய அரசாகும். காவல் நிலையத்தை நாடி வரும் சாமானியர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவது தான் ஒரு நல்ல ஆட்சியின் அடையாளம்.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் புகார் கொடுக்க வரும் மனுதாரர்களுக்கு வழிகாட்ட வரவேற்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பாளர்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மட்டுமே செய்யச் சொல்ல வேண்டும். அவர்களை மற்ற பணிகளுக்கு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

பெறப்படும் அனைத்து புகார்களும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு, அதற்கான ஒப்புகைச் சீட்டு புகார்தாரருக்கு வழங்கப்பட வேண்டும். போக்சோ வழக்குகளில் தடய அறிவியல் துறையின் அறிக்கை மிக முக்கியம் என்பதால் அதனை விரைந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தந்தால் மட்டுமே, பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தின்மீது நம்பிக்கை ஏற்படும்."

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


Next Story