சென்னையில் 1,519 விநாயகர் சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி


சென்னையில் 1,519 விநாயகர் சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி
x

கோப்புப்படம் 

விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

நாளை விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1,519 விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை வைத்து வழிபடும் இடங்களில், கட்டுப்பாடுகளை மீறுவோர், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படி, தீயணைப்புத்துறை மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சியின் தடையில்லா சான்றிதழுடன் சிலைகளை வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ரோந்து வாகனங்கள் மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.


Next Story