"விவேகானந்தரைப் போல் பிரதமர் மோடி நாட்டின் நலனுக்காக பாடுபட்டு வருகிறார்" - மத்திய மந்திரி மீனாட்சி லேகி


விவேகானந்தரைப் போல் பிரதமர் மோடி நாட்டின் நலனுக்காக பாடுபட்டு வருகிறார் - மத்திய மந்திரி மீனாட்சி லேகி
x

விவேகானந்தரைப் போல் பிரதமர் மோடி நாட்டின் நலனுக்காக அயராது பாடுபட்டு வருவதாக மத்திய மந்திரி மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி,

சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு இன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணை மந்திரி மீனாட்சி லேகி கலந்து கொண்டார். விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு மூலம் சென்ற அவர், விவேகானந்தர் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் விவேகானந்தர் பாறையில் அமர்ந்து யோகாசனம் செய்தார். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி விவேகானந்தா மைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"யோகா செய்வதன் மூலம் மனம், உடல், ஆன்மா ஒருங்கிணைக்கப்படுகிறது. நம்மை சுற்றி ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை யோகா பயிற்சியால் ஏற்படும். மிகப்பெரிய நாடான இந்தியா தியானத்தினால் சுதந்திரம் அடைய முடியும் என்ற தன்னம்பிக்கையை சுவாமி விவேகானந்தர் ஏற்படுத்தினார்.

நாட்டின் கலாச்சாரத்திலும் ஆன்மீகத்திலும் நம்பிக்கை கொண்டிருந்த சுவாமி விவேகானந்தர் நாட்டின் கலாச்சாரத்திற்காக, நாட்டுக்காக தொடர்ந்து பாடுபட்டது போல், பிரதமர் மோடி தொடர்ந்து நாட்டு நலனுக்காக அயராது பாடுபட்டு வருகிறார்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story