பிளஸ் 2 பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் 3-ந்தேதி வெளியீடு

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வருகிற 13-ந்தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது.
சென்னை,
தமிழகத்தில் பிளஸ்-2 எனப்படும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வருகிற 13-ந்தேதியும், பிளஸ்-1 எனப்படும் 11-ம் வகுப்புக்கு வருகிற 14-ந்தேதியும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்புக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதியும் அரசு பொதுத் தேர்வுகள் தொடங்க இருக்கிறது. இதையொட்டி பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கியது.
இந்தநிலையில், பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வருகிற 13-ந்தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை எழுதுவதற்காக மாணவ-மாணவிகள் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்வுக்கான ஹால்டிக்கெட் 3-ந்தேதி (நாளை மறுநாள் ) வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வுத் துறையின் https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தங்கள் பள்ளி மாணவர்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால்டிக்கெட்டில் மாணவர்களின் கையொப்பம் பெற்று பத்திரமாக வைத்திருந்து, தேர்வுக்கு சில நாட்கள் முன்பு வினியோகம் செய்யவும் உத்தரவிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.