கூடலூர் அருகே 4 மாத நிலுவை சம்பளத்தை வழங்க கோரி தோட்டத் தொழிலாளர்கள் தர்ணா ...!


கூடலூர் அருகே 4 மாத  நிலுவை சம்பளத்தை வழங்க கோரி தோட்டத் தொழிலாளர்கள் தர்ணா ...!
x

கூடலூர் அருகே 4 மாத நிலுவை சம்பளத்தை வழங்க கோரி தோட்டத் தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்

நீலகிரி


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மேல் கூடலூர் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 4 மாத நிலுவை சம்பளம் வழங்கவில்லை என தெரிகிறது. இதனால் நிலுவை சம்பளத் தொகையை வழங்க கோரி இன்று காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த தாசில்தார் சித்தராஜ், மற்றும் போலீசார் விரைந்து வந்த தோட்டத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிலவை சம்பளம் கிடைக்காததால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகும் நிலை உள்ளது என்ற தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தோட்ட நிர்வாகத்திடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒரு மாத சம்பளம் வழங்குவதாக எஸ்டேட் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story