கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு - படிக கல்லால் செய்யப்பட்ட எடைக்கல் கண்டுபிடிப்பு


கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு - படிக கல்லால் செய்யப்பட்ட எடைக்கல் கண்டுபிடிப்பு
x

கீழடி அகழாய்வில் படிக கல்லால் செய்யப்பட்ட எடைக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் கீழடியில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் தங்க அணிகலன்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட விலங்கின உருவங்கள், ஆட்டக்காய்கள், கண்ணாடி மணிகள், ஆபரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கீழடியில் தற்போது நடந்து வரும் 9-ம் கட்ட அகழாய்வுப் பணியின் போது படிக கல்லால் செய்யப்பட்ட எடைக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 8 கிராம் எடை கொண்ட இந்த எடைக்கல்லை முன்னோர்கள் வியாபாரத்திற்காக பயன்படுத்தி இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதன் மேற்பகுதி மற்றும் அடிப்பகுதி தட்டையாக்கப்பட்டு, ஒளி புகும் தன்மையுடன் காணப்படுகிறது. இது குறித்து மேலும் ஆய்வு செய்யும் போது இதன் பயன்பாடு குறித்த கூடுதல் தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story