துணை போலீஸ் சூப்பிரண்டிடம் அ.தி.மு.க.வினர் கோரிக்கை மனு


துணை போலீஸ் சூப்பிரண்டிடம் அ.தி.மு.க.வினர் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 9 April 2023 12:15 AM IST (Updated: 9 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் அ.தி.மு.க.வினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை அ.தி.மு.க. எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் அக்கட்சியினர் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் மனு கொடுத்தனர். அதில் எட்டயபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடத்தின் கழிப்பறை தடுப்பு சுவர் இடிந்து விழுந்து 5 மாணவிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்துக்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம். எனவே இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மனுவை பெற்றுக் கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ. பெருமாள், விளாத்திகுளம் அ.தி.மு.க. நகரச் செயலாளர் மாரிமுத்து, விளாத்திகுளம் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.



1 More update

Next Story