செல்லப்பிராணிகள் வளர்க்கும் உரிமையாளர்கள் அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி
மாநகராட்சியின் விதிகளின்படி செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள் அதற்கான உரிமத்தை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியின் விதிகளின்படி செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள் அதற்கான உரிமத்தை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் கட்டணம் 50 ரூபாய் என்ற வகையில் வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கும் முறையில் , திரு.வி.க. நகர், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் மற்றும் கண்ணம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் செல்லப்பிராணிகளின் சிகிச்சை மையங்களிலும் வழங்கப்படுகிறது.என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர்த்து) இயங்கும் இந்த கால்நடை மருத்துவ சிகிச்சை மையங்களின் சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு பொது மக்ககளை கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இம்மையங்களில் செல்லப்பிராணிகளுக்கு பொதுவாக ஏற்படும் அனைத்து வகை நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுவதுடன், உடல்நலக் குறைவு ஏற்படாத வகையில் தடுக்க கால்நடை உதவி மருத்துவர்களால் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021-2022 நிதி ஆண்டில் இம்மையங்களில் 21,020 எண்ணிக்கையிலான செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை (Rabies free Chennai) என்ற இலக்கினை அடையும் பொருட்டு இம்மையங்களில் அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி (Anti Rabies Vaccine) முற்றிலும் இலவசமாக செலுத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது