பல்வேறு நிபந்தனைகளுடன் கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பல்வேறு நிபந்தனைகளுடன் கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

பல்வேறு நிபந்தனைகளுடன் கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோவில்களில் தற்போது சித்திரை திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. இந்த திருவிழாக்களில் காலம் காலமாக கலாசார ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

ஆடல், பாடல் நிகழ்ச்சியில் நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனையும் மேலும் தற்போது-கொரோனா தொற்று பாதிப்புக்கு பின் நடைமுறை தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் காவல் துறையினர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கவில்லை.

இதனால் கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க தர கோரி விடுமுறை கால நீதிமன்றத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.அதில், அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து ஆடல் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. என குறிப்பிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி கூறுகையில், இரு ஜாதியினர் இடையேயொ அல்லது இரு தரப்பினர் இடையேயோ பிரச்சனைகள் இருந்தால் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்யலாம். ஆனால் அனைத்து தரப்பினரும் ஒன்று கூடுவது தவறு என கூற முடியாது. இதனை இந்த நீதிமன்றம் ஏற்காது.திருவிழாக்கள் என்பது வெளியூரில் வேலை செய்யும் மக்கள் தங்கள் ஊர்களுக்கு சென்று ஒன்றுகூடி கொண்டாடுவது.

திருவிழாக்களின் போது ஒலிபெருக்கிகள் வைப்பதற்கும், மின் இணைப்பு வைப்பதற்கும் சம்பந்தப்பட்ட துறைகளில் அனுமதி பெறுவது என்பது பாதுகாப்பை உறுதிப்படுத்தவே. ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவில்லை என பல்வேறு வழக்குகள் நீதிமன்றம் வந்துள்ளன.

காவல்துறையினர் தங்களது வேலையை சரியாக செய்யவில்லை என்பதை இது காட்டுகிறது. திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை காவல்துறையினர் நடத்த முடியவில்லை என்றால் விலகிக் கொள்ளுங்கள்.பிரச்சனைகள் ஏற்படாமல் தடுப்பதற்கே காவல்துறையினர் உள்ளனர். .விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும், ஆபாச நடனங்களோ, வார்த்தைகளோ இடம் பெறக்கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.


Next Story