பெரியநாயகி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை


பெரியநாயகி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சித்தலூரில் இன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே உள்ள சித்தலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) மயானக் கொள்ளை நிகழ்ச்சியும், நாளை(திங்கட்கிழமை) தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது.

இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மயானக்கொள்ளை நடைபெறும் மணிமுக்தா ஆற்றுப்பகுதியை பார்வையிட்ட அவர் ஆற்றுப்பகுதியில் பொதுமக்கள் வந்து செல்லும் பாதைகளை சீரமைக்க வேண்டும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சாமிக்கு படையல் இட்டு அதன் பிறகு மயானக் கொள்ளையை மேலும் 3 இடங்களில் நடத்துமாறு கூறினார். மேலும் கோவிலை சுற்றி 4 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க வேண்டும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சுமார் 30 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வந்து செல்லும் வழியை ஒரு வழி பாதையாக மாற்றி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியிடம் அறிவுறுத்தினார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுதாகரன், வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், செயல் அலுவலர் சங்கர், தனிப்பிரிவு போலீசார் கொளஞ்சி ராஜன், பரம்பரை தர்மகர்த்தாக்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story