ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்:290 வழக்குகளுக்கு சமரச தீர்வு


ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்:290 வழக்குகளுக்கு சமரச தீர்வு
x

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தில் 290 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 290 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நாடு முழுவதும் மாதந்தோறும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக முடித்து வைக்கும் வகையில் இந்த மக்கள் நீதிமன்றம் நடந்து வருகிறது.

அதன்படி ஈரோடு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம், கொடுமுடி ஆகிய கோர்ட்டுகளில் நடந்தது. ஈரோடு சம்பத்நகரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்துக்கு, மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

சமரச தீர்வு

கோர்ட்டுகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 773 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. முடிவில் 290 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. மேலும் ரூ.9 கோடியே 71 லட்சத்து 87 ஆயிரத்து 778 நிவாரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டன.

முன்னதாக, மோட்டார் வாகன விபத்து வழக்கு ஒன்றில் பாதிக்கப்பட்ட ஒருவரின் குடும்பத்துக்கு ரூ.38 லட்சம் இழப்பீட்டு தொகைக்கான ஆணையை மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் வழங்கினார். இதில் நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் (கூடுதல் பொறுப்பு) சண்முகப்பிாியா செய்திருந்தாா்.


Next Story