சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் - கடும் போக்குவரத்து நெரிசல்


சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் - கடும் போக்குவரத்து நெரிசல்
x

சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வருவதால், சென்னையில் தங்கியிருந்து பணிபுரிந்து வரும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையே, மக்கள் தங்களது சொந்த வாகனங்கள் மூலமாகவும் சென்னையை விட்டு வெளியேறி வருகின்றனர். ஒரே நேரத்தில் மக்கள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுங்கச்சாவடி அருகே சுமார் 2 கிலோமீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story