'காலநிலை அகதிகளாக பலர் வெளியூர்களுக்கு செல்கின்றனர்' - சவுமியா அன்புமணி
காலநிலை அகதிகளாக பலர் வெளியூர்களுக்கு செல்கின்றனர் என சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை கழகத்தின் கூட்டத்தில், பசுமைதாயகம் சார்பில் அதன் தலைவர் சவுமியா அன்புமணி கலந்து கொண்டு காலநிலை மாற்றத்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். இந்நிலையில் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"காலநிலை மாற்றத்தால் பெண்களுக்கு தேவையான அன்றாட தண்ணீரே பிரச்சினைதான். தண்ணீருக்காகவும், வேலைக்காகவும் அவர்கள் பல மைல்கள் நடந்து செல்கிறார்கள். காலநிலை அகதிகளாக பலர் வெளியூர்களுக்கு செல்கின்றனர்.
பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழல் மாசடைவதையும் தடுக்க வேண்டும். அதேபோல் பசுமை இல்ல வாயுக்களை குறைக்க வேண்டும். அதற்கு நாம் மண்ணுக்கு அடியில் கிடைக்கும் புதைபடிவ எரிபொருளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.