,ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்
குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். அரசு கூடுதல் செயலாளரும், நிதித்துறை இயக்குனருமான ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் பணப்பலன்கள், நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு, மருத்துவக் காப்பீடு போன்ற குறைகளை களைவதற்காக குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டு, ஓய்வூதியதாரர்களிடம் குறைகள் தொடர்பாக மனுக்கள் பெற்று தீர்வு காணப்பட்டு வருகிறது.
கோரிக்கை மனுக்கள் தீர்வு
ஓய்வூதியம் தாமதமானாலோ, குடும்ப ஓய்வூதியமாகவோ மாற்ற வேண்டும் எனில் படிவம் மூலம் தங்களுக்கு உரிய மாவட்ட கருவூலங்கள் மூலம் தீர்வு பெறலாம். ஓய்வூதியர்களிடம் இருந்து பெறப்பட்ட 8 கோரிக்கை மனுக்கள் உடன் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (கணக்கு) அருணாசலம், மாவட்டகருவூலஅலுவலர் சுனில்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி மற்றும் அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர்.