அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஆணை
ஓசூரில் அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்டது.
ஓசூர்:-
தமிழக அமைப்புசாரா உடல் உழைப்பு தொழிலாளர் மாநில சங்கம் சார்பில், அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழக அரசு வழங்கும் ஓய்வூதியத்திற்கான ஆணை ஆன்லைன் மூலமாக பெறப்பட்டு, தொழிலாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி ஓசூர் காமராஜர் காலனியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. தமிழக அமைப்புசாரா உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரியங்களின் மாநில ஆலோசனைக்குழு உறுப்பினரும், தொழிற்சங்க மாநில தலைவருமான இளஞ்சூரியன் கலந்துகொண்டு, தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில், விசைத்தறிப்பிரிவு மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட அமைப்புசாரா பிரிவு செயலாளர் மனோகரன், மாவட்ட மகளிரணி தலைவி சத்யா, மாநில சட்ட பாதுகாப்பு குழு துணைத்தலைவி வனதாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அலுவலக நிர்வாகிகள் வினோதினி, ரக்க்ஷன் ஆகியோர் செய்திருந்தனர்.