திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் அவதி


திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் அவதி
x

திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர் பற்றாக்குறையால் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவதியடைகின்றனர்.

திருவள்ளூர்

திருத்தணி ஆறுமுகசாமி கோவில் தெருவில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் பல்வேறு நோய்களுக்காக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதேபோல் உள்நோயாளிகளாக விபத்தில் காயம் அடைந்தவர்கள் அதிக அளவு அரசு ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.

தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. ஆனால் தினமும் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள், நர்சுகள், மருந்தாளுனர்களை மாவட்ட நிர்வாகம் போதிய அளவில் நியமிக்கவில்லை என நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக மதியத்திற்கு மேல் போதிய டாக்டர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இங்குள்ள ரத்த பரிசோதனை பிரிவில் ஊழியர் பற்றாக்குறையால் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவதியடைகின்றனர்.

எனவே பொதுமக்கள் நலன் கருதி திருத்தணி ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்கள், ரத்த பரிசோதனை மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story