ெரயில் நிலையத்தில் பயணியின் செல்போன் திருட்டு
சூரமங்கலம்:-
சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் பயணியின் செல்போன் திருட்டு போனது. சார்ஜர் போட்ட இடத்தில் கைவரிசை காட்டியவர் கைது செய்யப்பட்டார்.
ரெயில் பயணி
மதுரை நேதாஜி ரோடு சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் மாரீசன் (வயது55). இவர், ஓசூர் செல்வதற்காக நேற்று அதிகாலை 3 மணிக்கு சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையம் வந்தார், பின்னர் ெரயில் டிக்கெட் எடுத்து ெரயில் நிலையத்தில் காத்திருந்தார். 4 -வது நடைமேடையில் பயணிகள் காத்திருக்கும் அறையில் மாரீசன் தனது செல்போனை சார்ஜர் போட்டுக்கொண்டு அதன் அருகிலேயே தூங்கிவிட்டார்.
திடீரென கண்விழித்து பார்த்த போது சார்ஜர் போட்டிருந்த செல்போனை காணவில்லை. மர்மநபர் திருடி சென்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
கைது
அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த நபர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தென்கரை கோட்டை மஜீத்தெருவை சேர்ந்த அஜிம்பாட்சா (32) என்பதும், மாரீசன் செல்போனை திருடியதும் தெரிய வந்தது. உடனே போலீசார் அஜிம்பாட்சாவை கைது செய்து செல்போனை மீட்டனர்.