நாடாளுமன்றத் தேர்தல்: அதிமுக சார்பில் குழுக்கள் அமைப்பு
தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி மற்றும் பென்ஜமின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான தேர்தல் அட்டவணையை பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக தனியாக நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிமுக சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி மற்றும் பென்ஜமின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், பொன்னையன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, பா.வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் பிரசாரக் குழுவில், தம்பிதுரை எம்.பி., செங்கோட்டையன், என்.தளவாய்சுந்தரம், செல்லூர் ராஜூ, தனபால், கே.பி.அன்பழகன், காமராஜ், கோகுல இந்திரா, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், என்.ஆர்.சிவபதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் விளம்பரக் குழுவில், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, பி.வேணுகோபால், வி.பி.பி. பரமசிவம், ஐ.எஸ்.இன்பதுரை, எஸ். அப்துல் ரஹீம், வி.வி.ஆர். ராஜ் சத்யன், வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கழக உடன்பிறப்புகள் குழுக்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Live Updates
- 22 Jan 2024 11:47 AM IST
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா - சங்கராச்சாரியார்கள் புறக்கணிப்பு
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு துவாரகை, சிருங்கேரி சங்கராச்சாரியார்கள் செல்லாமல் புறக்கணித்துள்ளனர். கட்டி முடிக்கப்படாமல் அயோத்தி ராமர் கோவில் திறக்க சங்கராச்சாரியாரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல பிரதமர் மோடி, ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யவும் சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.