பழனி தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் தொடங்கியது.. தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்


பழனி தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் தொடங்கியது.. தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்
x
தினத்தந்தி 4 April 2023 5:28 PM IST (Updated: 4 April 2023 5:41 PM IST)
t-max-icont-min-icon

சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

சூரர்களை வென்றபின் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளன்று தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்த நாளே பங்குனி உத்திர திருவிழாவாக ஒவ்வொரு முருகன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், பழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக பழனியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story