'பாண்டியர்கள் உலக அளவில் சிறந்த வணிகர்களாக திகழ்ந்துள்ளனர்' - கவர்னர் ஆர்.என்.ரவி


பாண்டியர்கள் உலக அளவில் சிறந்த வணிகர்களாக திகழ்ந்துள்ளனர் - கவர்னர் ஆர்.என்.ரவி
x

பாண்டியர்கள் உலக அளவில் சிறந்த வணிகர்களாக திகழ்ந்துள்ளனர் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை,

மதுரை வேலம்மாள் கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி, 7 துறைகளை சேர்ந்த 454 இளங்கலை பட்டதாரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதன் பின்னர் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் நம் தேசத்தின் பெருமை என்றார்.

கடைக்கோடியில் இருந்து விடுதலையை போராடி பெற்ற இந்திய நாடு, இன்று உலகின் மூன்றாவது பெரிய நாடாக வளர்ந்துள்ளதாகவும், இந்தியாவின் சக்தியே மாணவர்கள்தான் என்றும் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

மேலும் 'சிலப்பதிகாரம்' குறித்து பேசிய அவர், "சிலப்பதிகாரம் ஒரு இலக்கியம் மட்டுமல்ல, அது நமது வரலாறு. பாண்டியர்கள் உலக அளவில் சிறந்த வணிகர்களாக திகழ்ந்துள்ளனர்" என்று கூறினார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு கோடியே 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சாமானியர்கள், மித்ரா கடன் மூலம் பயன் பெற்றுள்ளதாகவும், பல லட்சம் பட்டதாரிகள் மித்ரா கடன் மூலம் இன்று தொழிலதிபர்களாக முன்னேறி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story