சீறிப்பாயும் காளைகள்.. அடக்கும் காளையர்கள்... விறுவிறுப்பாக நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு


தினத்தந்தி 16 Jan 2024 7:06 AM IST (Updated: 16 Jan 2024 5:38 PM IST)
t-max-icont-min-icon

1,000 காளைகளுடன், 700 மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை,

பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இதில் நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை ஆட்சியர் சங்கீதா மற்றும் அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக மொத்தம் 3,677 காளைகளுடன், 1,412 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தனர். இதில் 1,000 காளைகளுடன், 700 மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போட்டியில் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி, வாடிவாசல், பார்வையாளர் மாடத்தில் 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.




Live Updates

  • 16 Jan 2024 2:43 PM IST

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 35 பேர் காயம் அடைந்து உள்ளனர். 3 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

  • 16 Jan 2024 12:30 PM IST

    மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை 16 பேர் காயம் அடைந்துள்ளனர். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

  • 16 Jan 2024 12:11 PM IST

    பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின் 4ம் சுற்று நிறைவு பெற்றுள்ளது. இதுவரை 373 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

  • 16 Jan 2024 11:32 AM IST

    பாலமேடு ஜல்லிக்கட்டில் 8 காளைகளை அடக்கி பிரபாகரன் என்ற மாடுபிடி வீரர் முதலிடம்

  • 16 Jan 2024 11:28 AM IST



  • 16 Jan 2024 10:49 AM IST



  • 16 Jan 2024 10:29 AM IST

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனையில் 7 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  • 16 Jan 2024 10:09 AM IST

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 3வது சுற்று தொடங்கியது 3-வது சுற்றில் பிங்க் நிற சீருடையில் வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

  • 16 Jan 2024 9:12 AM IST



  • 16 Jan 2024 9:11 AM IST

    பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் சுற்று முடிவில் தலா 3 காளைகளை அடக்கி 3 வீர்ரகள் முன்னிலையில் உள்ளனர்.


Next Story