முறைகேடுகள் இன்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும்


முறைகேடுகள் இன்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும்
x

கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் முறைகேடுகளுக்கு இடம் இன்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அறிவுரை வழங்கினார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் முறைகேடுகளுக்கு இடம் இன்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அறிவுரை வழங்கினார்.

ஆலோசனை கூட்டம்

தஞ்சை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுடன், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கலந்தாய்வு கூட்டம் தஞ்சையில் நேற்று நடத்தினர். உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவின் பேரில், திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா ஆலோசனையின் பேரில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கினார். நுகர்பொருள் வாணிப கழக துணை மேலாளர்கள் இளங்கோவன் (கும்பகோணம்), வெற்றிச்செல்வன் (தஞ்சை), ராதாகிருஷ்ணன் (பட்டுக்கோட்டை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வரவேற்றார்.


துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பேசுகையில், தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. எனவே கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள், எந்தவித முறைகேடுகளுக்கும் இடம்இன்றி செயல்பட வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை காக்க வைக்காமல் உடனுக்குடன் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். விவசாயிகளிடம் இருந்து பணம் பெறுவதோடு, எடைகளில் முறைகேடு செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story