நெல், உளுந்து பயிருக்கு காப்பீடு செய்யலாம்


நெல், உளுந்து பயிருக்கு காப்பீடு செய்யலாம்
x

நெல், உளுந்து பயிருக்கு காப்பீடு செய்யலாம் என தியாகதுருகம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் வட்டாரத்தில் அக்டோபர் மாதம் வரையில் 3000 ஏக்கர் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 650 விவசாயிகள் 520 ஏக்கர் பரப்பளவிற்கு காப்பீடு செய்துள்ளனர். இதேபோல் மானாவரி உளுந்து பயிர் 4575 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 1315 விவசாயிகள் 1016 ஏக்கர் பரப்பளவிற்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர். இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட கூடுதலாக பெய்யலாம் என எதிர்பாக்கப்படுகிறது. எனவே இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் பொருளாதார இழப்பில் இருந்து விவசாயிகள் தங்களை காத்துக்கொள்ள பயிர் காப்பீடு செய்வது அவசியம். பயிர் காப்பீடு செய்வதற்கு சிட்டா, அடங்கல், ஆதார் எண், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொது துறை வங்கிகளில் உரிய முன்மொழிவு படிவத்தினை பூர்த்தி செய்து ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.464 மற்றும் உளுந்து பயிருக்கு ரூ.266 செலுத்தி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம். பயிர் கடன் பெறும் விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்து கொள்ளலாம். பயிர் காப்பீடு செய்ய வருகிற 15-ந் தேதி கடைசி நாள் ஆகும். எனவே விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்து பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Next Story