அனுப்பன்குளம் பஞ்சாயத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி
அனுப்பன்குளம் பஞ்சாயத்தில் தங்கப்பாண்டியன் நினைவு மேல்நிலை குடிநீர் தொட்டியை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
சிவகாசி,
அனுப்பன்குளம் பஞ்சாயத்தில் தங்கப்பாண்டியன் நினைவு மேல்நிலை குடிநீர் தொட்டியை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
குடிநீர் தொட்டி
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட அனுப்பன்குளம் பஞ்சாயத்தில் அப்பகுதியை சேர்ந்த ஐயப்பநாயக்கர்-பழனியம்மாள் குடும்பத்தினர் சார்பில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ரூ.10 லட்சம் மதிப்பில் தங்கப்பாண்டியன்-ராஜாமணியம்மாள் நினைவு மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் நினைவு நாளையொட்டி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. மாநில வர்த்தக அணி நிர்வாகி வனராஜா தலைமை வகித்தார். சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் முன்னிலை வகித்தார்.
மரக்கன்றுகள்
அனுப்பன்குளம் பஞ்சாயத்து தலைவர் கவிதா பாண்டியராஜன் வரவேற்றார். இதில் சிவகாசி மாநகர செயலாளர் உதயசூரியன், செயற்குழு உறுப்பினர் அதிவீரன்பட்டி செல்வம், ஒன்றிய செயலாளர் தங்கராசா, ஒன்றிய கவுன்சிலர்கள் டேலண்ட் அன்பரசு, சின்னதம்பி, தனலட்சுமி கண்ணன், மாநகர பகுதி கழக செயலாளர் காளிராஜன், திருத்தங்கல் நகர் மன்ற முன்னாள் துணைத்தலைவர் பொன்சக்திவேல், மாநகராட்சி கவுன்சிலர் சேதுராமன், திருப்பதி, திருத்தங்கல் ராஜேஷ், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பங்காரு, நாரணாபுரம் பஞ்சாயத்து தலைவர் தேவராஜன், அனுப்பன்குளம் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் நினைவு நாளையொட்டி அனுப்பன்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 100 இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனுப்பன்குளம் ஐயப்ப நாயக்கர்-பழனியம்மாள் குடும்பத்தினர் செய்திருந்தனர்.