200 பேருக்கு வீடுகள் கட்ட ஆணை


200 பேருக்கு வீடுகள் கட்ட ஆணை
x
தினத்தந்தி 13 July 2023 12:15 AM IST (Updated: 13 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 200 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணையை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வழங்கினார்.

விழுப்புரம்

விழுப்புரம்

கோலியனூர் ஒன்றியம்

ஏழை, எளிய மக்களுக்கு நிரந்தரமான, பாதுகாப்பான குடியிருப்பு வழங்குவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ் வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கலெக்டர் வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சி.பழனி கலந்துகொண்டு, 200 பேருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டுவதற்கு தலா ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்து 460 வீதம் ரூ.5 கோடியே 56 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், வீடுகள் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வீடுகள் கட்டி பயனடைய வேண்டுமென அறிவுறுத்தினார். இதில் உதவி திட்ட அலுவலர்(ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு) ராஜேந்திரன், உதவி திட்ட அலுவலர்(வீடு வழங்கும் திட்டம்) சுவர்ணலதா, வட்டார வளர்ச்சி அலுவலர்(வீடு வழங்கும் திட்டம்) பாஸ்கரன், கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story