அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 24 -ஆம் தேதி வரை வெளியிட வேண்டாம்: சென்னை ஐகோர்ட்


தினத்தந்தி 19 March 2023 10:24 AM IST (Updated: 19 March 2023 12:44 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் தொடங்கியது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவு பெறுகிறது. முதல் நாளான நேற்று எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதனிடையே, பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கும் போது பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்ட விரோதம் எனக்கூறி ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் தற்போது விசாரணை நடைபெற்றது.

சுமார் மூன்று மணி நேரங்கள் இந்த வழக்கின் விசாரணை பரபரப்பாக நடைபெற்றது. ஒபிஎஸ் - இபிஎஸ் தரப்பில் பரபரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட்ட நிலையில், ஜூலை 11 ஆம் தேதி தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் மார்ச் 24 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 24 -ஆம் தேதி வரை வெளியிட வேண்டாம் எனவும் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் என்றும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.



Live Updates

  • 19 March 2023 12:32 PM IST

    தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளை ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு முன் விசாரணைக்கு எடுக்கலாம்: நீதிபதி யோசனை

  • 19 March 2023 12:09 PM IST

    கட்சி விதிகளை எப்போது வேண்டும் என்றாலும் திருத்தலாம், சூழ்நிலைகள் மாறியதால் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன- அதிமுக தரப்பு வாதம்

  • 19 March 2023 12:05 PM IST

    உள்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது: அதிமுக தரப்பில் வாதம்

  • 19 March 2023 11:58 AM IST

    கட்சிக்கு எதிராக நீதிமன்றம் சென்றாலே கட்சி பதவிகள் பறிக்கப்படும் என்று கட்சி விதிகள் உள்ளன: இபிஎஸ் தரப்பு

  • 19 March 2023 11:52 AM IST

    2021- டிசம்பரில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலின் போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன: இபிஎஸ் தரப்பு

  • 19 March 2023 11:38 AM IST



  • 19 March 2023 11:37 AM IST

    அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை தான் விரும்புகின்றனர்: இபிஎஸ் தரப்பு

  • 19 March 2023 11:28 AM IST

    2021 டிசம்பரில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலின் போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளின் தான் வேட்பு மனுக்கள் பெறப்பட்ட்டன: இபிஎஸ் தரப்பு வாதம்

  • 19 March 2023 11:21 AM IST

    உரிமையியல் வழக்கை காரணம் காட்டி பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது: இபிஎஸ் தரப்பு வாதம்

  • 19 March 2023 11:15 AM IST

    கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இந்த 3 பேரும் வழக்கை தொடர அடிப்படை உரிமையில்லை; இபிஎஸ் தரப்பு வாதம்


Next Story