அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 24 -ஆம் தேதி வரை வெளியிட வேண்டாம்: சென்னை ஐகோர்ட்


தினத்தந்தி 19 March 2023 10:24 AM IST (Updated: 19 March 2023 12:44 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் தொடங்கியது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவு பெறுகிறது. முதல் நாளான நேற்று எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதனிடையே, பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கும் போது பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்ட விரோதம் எனக்கூறி ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் தற்போது விசாரணை நடைபெற்றது.

சுமார் மூன்று மணி நேரங்கள் இந்த வழக்கின் விசாரணை பரபரப்பாக நடைபெற்றது. ஒபிஎஸ் - இபிஎஸ் தரப்பில் பரபரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட்ட நிலையில், ஜூலை 11 ஆம் தேதி தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் மார்ச் 24 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 24 -ஆம் தேதி வரை வெளியிட வேண்டாம் எனவும் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் என்றும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.



Live Updates

  • 19 March 2023 11:13 AM IST

    உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது- அதிமுக தரப்பில் வாதம்

  • 19 March 2023 11:10 AM IST



  • 19 March 2023 10:56 AM IST

    பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை தேவை: ஓபிஎஸ் தரப்பு வாதம்

  • 19 March 2023 10:51 AM IST

    தீர்மானங்கள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அப்படி என்ன அவசரம்? ஓபிஎஸ் தரப்பு கேள்வி

  • 19 March 2023 10:47 AM IST

    தலைமைக்கழக நிர்வாகியாக இல்லாத அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிடாத படி விதிகள் திருத்தப்பட்டுள்ளன- ஓபிஎஸ் தரப்பு

  • 19 March 2023 10:42 AM IST

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகித்த பதவிகளை வேறு யாரும் அடைய முடியாது - ஓபிஎஸ் தரப்பு வாதம்


Next Story