அக்னிபத் திட்டத்தை எதிர்த்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


அக்னிபத் திட்டத்தை எதிர்த்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர்

அக்கினிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்தணி கமலா திரையரங்கம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் அப்சல் அகமது தலைமை தாங்கினர். வட்ட செயலாளர் அந்தோனி, வட்டகுழு உறுப்பினர்கள் கரிமுல்லா, பாலாஜி, சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.பி.எம். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் பெருமாள் கூறியதாவது, மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் மீது போர்தொடுத்தது, விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதால் விவசாய சட்டம் திரும்ப பெற்றது. தற்போது இளைஞர்கள் மீது அக்னிபத் திட்டத்தை திணிக்க முயற்சி செய்கிறது. இந்த திட்டம் இளைஞர்களை தீயபாதைக்கு அழைத்து செல்லும் என்றும், இளைஞர்களை செக்ரியூட்டி வேலைக்கு ஆள்எடுக்கும் திட்டம். என்று கூறினார்.


Next Story