அரியலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு


அரியலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
x
தினத்தந்தி 20 July 2023 12:00 AM IST (Updated: 20 July 2023 2:57 PM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அரியலூர்

நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

அரியலூர் மாவட்டத்தில் நவரை பட்டத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக காரைக்குறிச்சி, ஸ்ரீபுரந்தான், முட்டுவாஞ்சேரி, பிள்ளைப்பாளையம், கோடாலிகருப்பூர், சோழமாதேவி, வாழைக்குறிச்சி, ஸ்ரீராமன், ஓலையூர் ஆகிய 9 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில ஆதார், சிட்டா அடங்கல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை நேரில் கொண்டு சென்று, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து கே.ஒய்.சி. கொடுத்து புளூடூத் பிரிண்டர் கையடக்க கருவியில் விவசாயிகளின் கைவிரல் ரேகையை பதிவு செய்த பிறகு விவசாயிகளின் விவரங்கள் தெரியவரும். இதனடிப்படையில் முன்பதிவு செய்யப்படும்.

கைரேகை பதிவு

நேரடி நெல் கொள்முதல் மைய அலுவலர், விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார். பதிவு உறுதி செய்ததும், சம்பந்தப்பட்ட விவசாயி செல்போன் எண்ணுக்கு தகவல் அனுப்பப்படும். பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு, விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு செய்யப்படும்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட மையத்திற்கு நெல்லை கொண்டு சென்று விவசாயிகளின் கைரேகையை பதிவு செய்து விற்பனை செய்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story