திருச்சி பொன்மலை பணிமனையில் தயாரான ஊட்டி மலை ரெயில் என்ஜின்


திருச்சி பொன்மலை பணிமனையில் தயாரான ஊட்டி மலை ரெயில் என்ஜின்
x

திருச்சி பொன்மலை பணிமனையில் தயாரான ஊட்டி மலை ரெயில் என்ஜின் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி பொன்மலை பணிமனையில் தயாரான ஊட்டி மலை ரெயில் என்ஜின் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மலை ரெயில் என்ஜின்

யுனெஸ்கோ புகழ் வாய்ந்த ஊட்டி மலையில் இயக்கப்படும் மலை ெரயில் என்ஜின் திருச்சி பொன்மலையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊட்டி மலையில் 4 ரெயில் என்ஜின்கள் இயங்கி வருகின்றன. அவை நிலக்கரியில் ஓடினாலும் அவற்றை ஏதாவது எண்ணெய் மூலம் தான் இயக்க வேண்டும்.

இதற்காக உலை ஆயில் (பர்னஸ் ஆயில்) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த என்ஜினை ஆன் செய்யும் போது, அதிகளவில் புகை எழும்பும். இதனால் உலை ஆயிலுக்கு மாற்றாக அதிவேக டீசல் பயன்படுத்தும் உள்நாட்டு தொழில் நுட்பத்துடன் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள ெரயில் என்ஜின் தயாராகியுள்ளது.

டிஜிட்டல் விளக்குகள்

இதில், என்ஜினை இயக்க பயன்படுத்தும் அதிவேக டீசலை இருப்பு வைத்துக்கொள்ள 1,600 லிட்டர் கொள்ளளவுள்ள டீசல் டேங்க் மற்றும் நிலக்கரி மூலம் நீராவி உருவாக்க கொதிக்க வைக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் நிரப்பி வைக்க 4,500 லிட்டர் கொள்ளளவுள்ள 2 தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ெரயில் என்ஜினின் முன்பகுதியில் அதிக ஒளிரும் தன்மையுடன் கூடிய டிஜிட்டல் விளக்குகளும், அதேபோல என்ஜினின் உள்பகுதியில் எல்.இ.டி. பல்புகளும் உள்ளன.

ரூ.9.30 கோடியில்...

இந்த சிறப்பு ெரயில் என்ஜின் அமைக்கும் பணி ரூ.9.30 கோடி மதிப்பில் 70 பேர் கொண்ட குழுவினரால் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்த பணி தற்போது, முடிவடைந்துள்ளது. இந்த மலைரெயில் என்ஜின் நேற்று லாரி மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த என்ஜின் இயக்கத்துக்கு பின்னர் இதில் காணப்படும் நிறை குறைகளை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த ெரயில் என்ஜின்களும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே பணிமனையில் புனரமைப்பு செய்யப்பட்ட ெரயில் என்ஜின்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றைக் கொண்டு ஊட்டி மலை ெரயில் இயக்கப்படவுள்ளது.


Next Story