வேங்கைவயல் நீர் தேக்க தொட்டியில் கலந்த மனிதக் கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது - அதிர்ச்சி தகவல்


வேங்கைவயல் நீர் தேக்க தொட்டியில் கலந்த மனிதக் கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது - அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 21 April 2023 3:24 AM GMT (Updated: 21 April 2023 5:03 AM GMT)

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், வேங்கைவயல் நீர் தேக்க தொட்டியில் கலந்த மனிதக் கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது என்று தெரியவந்துள்ளது. மனிதக் கழிவுகள் கலந்த நீரை பகுப்பாய்வு மையம் பரிசோதனை செய்ததில் மனித கழிவு 3 பேருடையது என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பகுப்பாய்வு முடிவின் அடிப்படையில் 11 பேரிடம் விரைவில் டி.என்.ஏ சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆயுதப்படை காவலர் உள்பட இரண்டு பேரிடம் சென்னையில் இன்று குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட உள்ளது. குரல் பரிசோதனை, டி.என்.ஏ சோதனை முடிந்த பிறகு குற்றவாளிகள் யார் என்பது தெரியவர வாய்ப்பு உள்ளது


Next Story