"இலவசங்களுக்கும், நலத்திட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்" - கனிமொழி எம்.பி.


இலவசங்களுக்கும், நலத்திட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும் - கனிமொழி எம்.பி.
x

நலத்திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுக அறிவித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், பாதிக்கும் மேற்பட்டவை தேவையில்லாத இலவசங்கள் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இலவசங்களையும், அரசின் கடமைகளையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"நலத்திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கலைஞர் கருணாநிதி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். அந்த இலவச மின்சாரம் இல்லையென்றால் இன்று பல விவசாயிகள் விவசாயத்தை விட்டே போக வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்.

அதே போல், அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக இலவச கல்வி, இலவச அரிசி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அரசாங்கம் என்பது கார்ப்பரேட் நிறுவனம் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி என்பது, அவர்களை பாதுகாக்கவும், அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story