ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் - தமிழக அரசு
ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆர்.பி.ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர். இதில் பேரறிவாளன் அண்மையில் விடுதலை செய்யப்பட்டார். மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் 17-ல் பரோலில் வெளியே வந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு 10-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவரது தாயார் ராஜேஸ்வரி உடல்நலம் பாதிப்பு காரணமாக, அவர் உடனிருந்து கவனித்துக் கொள்ளும் வகையில், ரவிச்சந்திரனுக்கு மேலும் 30 நாட்கள் கூடுதலாக பரோலை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.