ஓணம் பண்டிகை: சென்னை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை


ஓணம் பண்டிகை: சென்னை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
x
தினத்தந்தி 28 Aug 2023 11:41 AM GMT (Updated: 28 Aug 2023 11:44 AM GMT)

ஓணம் பண்டிகையையொட்டி சென்னை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மக்கள் வசிக்கும் பல்வேறு மாநிலங்களிலும், நாடுகளிலும் கூட வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. அந்தவகையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, சென்னை ஆகிய பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

இந்த நிலையில், ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்ட அறிவிப்பில், "ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம் (29-ம் தேதி) சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு செப்டம்பர் 2-ம் தேதி பணி நாளாக செயல்படும்.

உள்ளுர் விடுமுறை நாளான 29.08.2023 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story