சி.பா.ஆதித்தனார்-பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள்விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்


தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சி.பா.ஆதித்தனார்-பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள்விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படுகிறது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பயின்றோர் கழகம் சார்பில் கல்லூரி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் மற்றும் நிறுவனர் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா நடைபெற உள்ளது. இவ்விழாக்களை முன்னிட்டு தமிழ்வழி பயிலும் பள்ளி மாணவர்களுக்கும், கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு வருகிற 27-ந் தேதி நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது.

இன்று(புதன்கிழமை) பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டியும், நாளை(வியாழக்கிழமை) கல்லூரி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியும், 23-ந் தேதி பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும், 24-ந் தேதி பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டியும் நடக்கின்றன. முதல் பரிசாக ரூ.1,500 மற்றும் சான்றிதழ், 2-ம் பரிசாக ரூ.1000 மற்றும் சான்றிதழ், 3-ம் பரிசாக ரூ.500 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். கல்லூரி முதல்வர் மற்றும் பயின்றோர் கழகத்தலைவர் து.சி.மகேந்திரன் தலைமையில் நடைபெறும் இப்போட்டி மற்றும் விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை தலைவர் மற்றும் பயின்றோர் கழக இணைச்செயலாளர் கு.கதிரேசன், செயற்குழு உறுப்பினர் கு.பாலமுருகன் ஆகியோர் செய்து வருகின்றனர். இவ்விழாவில் பயின்றோர் கழக செயலர், பொருளாளர், துணைத்தலைவர், செயற்குழு உறுப்பினர்கள், கழக அங்கத்தினர்கள் திரளாக பங்கேற்க உள்ளதாக, கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.


Next Story