சனிப்பெயர்ச்சியையொட்டிமகுடேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு


சனிப்பெயர்ச்சியையொட்டிமகுடேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 30 March 2023 4:08 AM IST (Updated: 30 March 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

சனிப்பெயர்ச்சியையொட்டி மகுடேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஈரோடு

கொடுமுடி

கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா கடந்த 26-ந் தேதி சனீஸ்வர பகவானுக்கு 108 கலச பூஜைகள், சிறப்பு அபிஷேகம் மற்றும் லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் 108 கலச பூஜை, லட்சார்ச்சனை ஆகியவை நடந்தது. நேற்று மதியம் 1.09 மணிக்கு சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததையொட்டி சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story