மழைக்கு ஒழுகும் அரசு பள்ளியை அதிகாரிகள் ேநரில் ஆய்வு


மழைக்கு ஒழுகும் அரசு பள்ளியை அதிகாரிகள் ேநரில் ஆய்வு
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மழைக்கு ஒழுகும் அரசு பள்ளியை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சேலம்

தேவூர்:-

சேலம் மாவட்டம் தேவூர் அருகே பெரமாச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் மேற்கூரை ஓடுகள் சேதமடைந்து உள்ளது. மழை பெய்யும் நாட்களில் மேற்கூரை வழியாக மழைநீர் வகுப்பறைக்குள் விழுகிறது. இதனால் ஆபத்தான நிலையில் குழந்தைகள் படித்து வருகின்றனர் என்று 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று காலையில் படத்துடன் செய்தி வெளியானது.

இதை பார்த்த சங்ககிரி வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துசாமி மற்றும் அதிகாரிகள் நேற்று காலையில் பெரமாச்சி பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வந்தனர். பின்னர் பள்ளியை பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அப்போது தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் அருள்முருகன் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.


Next Story