கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்; 10 பேர் மீது வழக்கு


கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்; 10 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 July 2023 1:37 AM IST (Updated: 3 July 2023 4:18 PM IST)
t-max-icont-min-icon

சுவாமிமலை அருகே கோவில் திருவிழாவில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதாக 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

சுவாமிமலை அருகே கோவில் திருவிழாவில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதாக 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆபாச நடன நிகழ்ச்சி

சுவாமிமலை போலீஸ் சரகம் மனப்படையூர் கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 1-ந்தேதி இரவு நடந்தது. இந்த விழாவில் இரவு 10 மணிக்கு மேல் ஆபாச நடன நிகழ்ச்சி நடந்தது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சுவாமிமலை போலீசார், ஊர் நாட்டாமைகள் மற்றும் விழா குழுவினரிடம் ஆபாச நடன நிகழ்ச்சி நடந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உடனே நிகழ்ச்சியை நிறுத்துமாறு தெரிவித்துள்ளனர்.

10 பேர் மீது வழக்குப்பதிவு

ஆனால் இதை மீறி ஆபாச நடன நிகழ்ச்சியை அவர்கள் நடத்தினர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆபாச நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஊர்நாட்டாமைகள் உள்பட 10 பேர் மீது சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவில் திருவிழாக்களில் இதுபோன்ற அனுமதியின்றி நடன நிகழ்ச்சிகளை நடத்தினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் விழாக்குழுவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story