1,852 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு
சிவகங்கை மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட 1,852 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட 1,852 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது:-
ஊட்டச்சத்து குறைபாடு
தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட 73 ஆயிரம் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,852 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்காக கூடுதலாக ஊட்டச்சத்து உருண்டைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு
மேலும் இந்த மாதம் முழுவதும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story