வரி செலுத்தாத 44 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்


வரி செலுத்தாத 44 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 22 Oct 2023 1:45 AM IST (Updated: 22 Oct 2023 1:46 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் பேரூராட்சியில் வரி செலுத்தாத 44 கட்டிடங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.

கோயம்புத்தூர்
கோட்டூர் பேரூராட்சியில் வரி செலுத்தாத 44 கட்டிடங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.


கட்டிடங்களில் நோட்டீஸ்


பொள்ளாச்சி அருகே கோட்டூர் பேரூராட்சி பகுதிகளில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த நிலையில் பேரூராட்சி மூலம் ஒவ்வொரு அரையாண்டும் வரி வசூல் செய்யப்படுகிறது. இந்த வரியை செலுத்தாத கட்டிடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


அதன்படி பேரூராட்சி செயலாளர் ஜெசசிமா பானு முன்னிலையில் வரி செலுத்தாத கட்டிடங்களுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக வரி செலுத்தாத கட்டிடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.


சீல் வைக்கப்படும்


இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-


பேரூராட்சிக்கு வருவாயை பெருக்கும் வகையில் வரி செலுத்தாத கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதில் 25 வணிக நிறுவனங்கள், 15 தொழிற்சாலைகள், 4 தனியார் பள்ளிகள் இதுவரைக்கும் வரி செலுத்தவில்லை என்பது தெரியவந்தது. இதன் மூலம் பேரூராட்சிக்கு சுமார் ரூ.30 லட்சம் வரை வரி இழப்பு ஏற்பட்டு உள்ளது.


இதை சரி செய்யும் வகையில் வரி செலுத்தாத கட்டிடங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. வரி செலுத்தினால் சீல் நடவடிக்கை கைவிடப்படும்.


இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story