கரூரில் பஸ் ஸ்டாண்ட் ஊழியரை தாக்கி பணம் பறித்த வடமாநில கும்பல் - பரவும் வீடியோவால் அதிர்ச்சி


கரூரில் பஸ் ஸ்டாண்ட் ஊழியரை தாக்கி பணம் பறித்த வடமாநில கும்பல் - பரவும் வீடியோவால் அதிர்ச்சி
x

வட மாநில இளைஞர்கள் அவரைத் தாக்கி சட்டையை கிழித்து அவரிடம் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

கரூர்,

கரூர் மாநகர் பேருந்து நிலையங்களில் பல்வேறு வழித்தடங்களுக்கு செல்லும் பேருந்துகள் குறித்த தகவல் தெரிவிக்க டைம் கேன்வாசர் (Sound boy) பணியில் உள்ளனர். அதைப்போலவே கரூர் மாநகர பேருந்து நிலையத்தில் டைம் கேன்வாஸராக புலியூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

அவர் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி செல்லும் பேருந்தின் இருக்கையில் இடம் பிடித்துள்ளார். அப்போது அங்கு வந்த வடமாநில இளைஞர்கள் சிலர் நீங்கள் இடம் பிடித்த இடத்தில் நாங்கள் தான் அமர்வோம் எனக்கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் அவர்களது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர். கீழே இறங்கிய செல்வராஜ் கூச்சல் இட்டு உள்ளார். அப்போது அங்கு ஐந்துக்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் அவரைத் தாக்கி சட்டையை கிழித்து அவரிடம் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வட மாநில இளைஞர்களை தாக்கியுள்ளனர். அந்த சமயத்தில் ரோந்து பணிக்காக வந்த காவல் துறையினரை கண்ட வட மாநில இளைஞர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை பறித்துச் சென்ற வட மாநில இளைஞர்கள் அவரது கையில் அணிந்திருந்த மோதிரத்தையும் கழற்ற முயன்றதாக செல்வராஜ் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்களும் வட மாநில இளைஞர்கள் குறித்து காவல் துறையினரிடம் நடந்தவற்றை தெரிவித்தனர்.

ஏற்கனவே சமீப காலமாக தமிழர்களுக்கும் வடமாநிலத்தர்களுக்கும் தமிழ்நாட்டில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்ட வண்ணம் உள்ளது. கடந்த மாதம் கூட திருப்பூர் தனியார் பனியன் நிறுவனத்தில் பணியில் ஈடுபட்ட வட மாநிலங்கள் தமிழர்களை ஓட ஓட விரட்டி தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த வாரம் கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் தனியார் கேண்டினில் பணிபுரியும் வட மாநில இளைஞர்களுக்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அவர்களுக்குள் உருட்டுக் கட்டையை கொண்டு தாக்கி, அது ஒரு பூதாகரமான பிரச்சினையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story