என்னதான் புரண்டாலும் தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது.. பிரதமர் மோடி குறித்து அமைச்சர் கடும் விமர்சனம்
தமிழக நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டம் நேற்று நடைபெற்றது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது ,
பிரதமர் மோடி நான்கு நாட்களுக்கு ஒரு முறை தமிழகம் வருகிறார். வட்டி வசூலிப்பவர் கூட தாமதமாகதான் வருவார். ஆனால் மோடி தமிழகத்திற்கு திருப்பி திருப்பி வருகிறார். என்னதான் தரையில் புரண்டாலும் ஒட்டும் மண்தான் ஒட்டும் எனவே தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது.
தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் தத்தளித்துக் கொண்டிருந்தபோது பிரதமர் ஐந்து ரூபாயாவது நிவாரணமாக அளித்து இருந்தால் அவரை நான் வரவேற்று இருப்பேன். ஆனால் அவர் இப்போது வந்து நெல்லையில் உரையாற்றுகிறார். எதற்காக அவர் இப்போது வந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் தமிழக நிதி அமைச்சராக நான் எப்படி அவரை வரவேற்பது?. என கூறினார்.