கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தம்
போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் கால்வாய் அமைக்கும் பணி இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடலூர்,
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 2-வது சுரங்கப்பணிக்காக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கற்றாழை, கரி வெட்டி, மேல் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும், என்.எல்.சி. வெளியேற வலியுறுத்தியும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலியில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேல் வளையமாதேவி கிராமத்தில் கால்வாய் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.
பாமக போராட்டம் காரணமாக நெய்வேலியில் 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாமக போராட்டத்துக்கு போலீசார் செல்வதால், கால்வாய் அமைக்கும் பணிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் இன்று கால்வாய் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.