புதிய வகை கொரோனா தொற்று: மக்கள் அச்சப்பட தேவையில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்


புதிய வகை கொரோனா தொற்று: மக்கள் அச்சப்பட தேவையில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

புதிய வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

பருவமழையையொட்டி, சென்னையில் 10-வது வார சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது;

"கொரோனா வைரஸ், கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல உருமாற்றங்களுடன் பரவி வரும் கொரோனா வைரஸ், தற்போது ஜே.என்.1 என்ற புதிய உருமாற்றம் பெற்றுள்ளது. இதன் பரவல் தெற்கு ஆசியாவில் அதிகரித்து வருகிறது.

மிதமான பாதிப்பை ஏற்படுத்தும் வைரசாக உள்ளது. ஜே.என்.1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. புதிய கொரோனா உருமாற்றமானது அதிக அளவிலான கூட்டு பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.

இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களில் முக கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா தொற்று குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story