சென்னையில் புதிய மெட்ரோ ரெயில் வழித்தடம் - சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்க முடிவு


சென்னையில் புதிய மெட்ரோ ரெயில் வழித்தடம் - சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்க முடிவு
x

கோப்புப்படம் 

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

சென்னை,

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் சேவை 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயன்பாட்டில் உள்ளது. தற்போது அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் சென்னையின் முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னை மாதவரத்தில் இருந்து விம்கோ நகர் வழியாக எண்ணூர் வரையிலான 16 கி.மீ புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிப்பதற்கு முறையான டெண்டரை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் வெளியிட உள்ளது.


Next Story