மாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்


மாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
x

முருக்கன்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள முருக்கன்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலுக்கென்று தனியாக தேர் இல்லாததால் விழாக்காலங்களில் அருகே உள்ள கோவிலுக்கு சொந்தமான தேரை கொண்டு வந்து தேரோட்டம் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் மகா மாரியம்மன் கோவிலுக்காக புதிய தேர் செய்து தேரோட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக தேர் செய்யப்பட்டது.

இதையடுத்து தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியையொட்டி நேற்று கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு யாக பூஜை நடைபெற்றது. இதனைதொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்து இருந்தனர்.


Next Story