வள்ளியூரில் புதிய ஆவின் பாலகம்; சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்


வள்ளியூரில் புதிய ஆவின் பாலகம்; சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்
x

வள்ளியூரில் புதிய ஆவின் பாலகத்தை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூரில் புதிய ஆவின் பாலகத்தை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

புதிய ஆவின் பாலகம் திறப்பு

வள்ளியூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள நாங்குநேரி- ராதாபுரம் தாலுகாக்கள் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் புதிய ஆவின் பாலகம் திறப்பு விழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

மாவட்ட தலைமை மருத்துவமனை

கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் ஆவின் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. பின்னர் உயர்த்தப்பட்ட பால் விலையை தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் லிட்டருக்கு ரூ.3 குறைத்து மக்களுக்கு வழங்கி வருகிறார். சாமானிய மக்களுக்கு குறைந்த விலையில் பால் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், உற்பத்தி செய்கின்ற பால் உற்பத்தியாளர்களுக்கும் பாதிப்பின்றி விலை கிடைக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிகை எடுத்து வருகிறார்.

நெல்லை மாவட்ட தலைமை மருத்துவமனை தற்போது வள்ளியூரில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வள்ளியூர், பணகுடி திசையன்விளை நகர பஞ்சாயத்து பகுதிகளில் வீடு இல்லாத மக்களுக்கு வீடு கட்ட திட்டம் தயார் செய்யப்பட்டு விரைவில் வீடு கட்டும் பணி தொடங்கப்பட இருக்கிறது. சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கண்ணன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் நம்பி, நகர செயலாளர் சேதுராமலிங்கம், ஆவின் பொது மேலாளர் தினேஷ் பாபு, கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் மன்னராஜா, கூட்டுறவு சார்பதிவாளர்கள் தினேஷ்குமார், செல்வகுமார், பொதுமேலாளர் தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அழகிரி வரவேற்றார். சேரன்மகாதேவி கூட்டுறவு சங்க துணை பதிவாளர் முத்துசாமி நன்றி கூறினார். பணகுடி பேரூராட்சி தர்மபுபுரம் மற்றும் அச்சம்பாடு பஞ்சாயத்து மடப்புரம் ஆகிய பகுதிகளில் பகுதிநேர ரேஷன் கடைகளை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

1 More update

Next Story