சென்னை விமான நிலையத்தில் புதிய 6 அடுக்கு பார்க்கிங் வசதி - பலமடங்கு கட்டண உயர்வால் மக்கள் அதிருப்தி
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வருகிற டிசம்பர் மாதம் 4-ந்தேதி முதல் அதிநவீன 6 அடுக்கு பார்க்கிங் வசதி அறிமுகமாகிறது.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வருகிற டிசம்பர் மாதம் 4-ந்தேதி முதல் அதிநவீன 6 அடுக்கு பார்க்கிங் வசதி அறிமுகமாகிறது. இந்த நிலையில் பார்க்கிங் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
அதன்படி புதிய பார்க்கிங்கில் இருசக்கர வாகனங்களை இரண்டு மணிநேரம் வரை நிறுத்த கட்டணம் ரூ.25-லிருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ரூ.5 உயரும். கார்களை 30 நிமிடங்கள் வரை நிறுத்த ரூ.40-லிருந்து ரூ.75 ஆகவும் 2 மணிநேரத்திற்கு ரூ.100-லிருந்து ரூ.150 ஆகவும் ஒரு நாள் முழுவதும் நிறுத்த ரூ.500-ம் வசூலிக்கப்படும்.
வேன் மற்றும் டெம்போ வாகனங்களை 30 நிமிடங்கள் வரை நிறுத்த ரூ.40-லிருந்து ரூ.300 ஆகவும் ஒரு நாள் முழுவதும் நிறுத்த ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படும். பஸ் மற்றும் டிரக்குகளை 2 மணிநேரம் வரை நிறுத்த ரூ.110-லிருந்து ரூ.600 ஆகவும் ஒரு நாள் கட்டணமாக 2 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.