'நெல்லை ரெயில் நிலையம் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படும்'-தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்


நெல்லை ரெயில் நிலையம் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படும்-தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்  தகவல்
x

நெல்லை ரெயில் நிலையம் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படும்’ என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

திருநெல்வேலி

'நெல்லை ரெயில் நிலையம் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படும்' என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

ஆய்வு

நெல்லை-நாகர்கோவில் இடையே இரட்டை வழி ரெயில் பாதை அமைக்கும் பணி மற்றும் நெல்லை சந்திப்பு நிலையத்தில் நடைபெறுகின்ற பணிகளையும் தெற்கு ெரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அதிக வருவாயை ஈட்டி வருகிறது. இதனால் இந்த ரெயில் நிலையத்தை சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நிலையம் விமான நிலையம் போல் அமைப்பில் இருக்கும். அதற்கு தேவையான இட வசதிகள் மற்றும் பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பப்பட்டு அரசு நிதி ஒதுக்கிய உடன் நெல்லை ரெயில் நிலையம் சீரமைக்கும் பணி சில வருடங்களுக்குள் முடிக்கப்படும்.

'வந்தே பாரத்' ரெயில்

'வந்தே பாரத்' ரெயில் நெல்லையில் இருந்து அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் இயக்கப்படும். நெல்லை ரெயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்கப்படும். நாகர்கோவில்-நெல்லை இரட்டை வழியில் பாதை அமைக்கும் பணி விரைவில் முடிவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story